108 Ambulance Services: interview for medical assistant, driver : 45 persons selected

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்காக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 45 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
தமிழக அரசு தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ நிறுவனத்துடன் அவசர கால சேவைகளை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ நிறுவனத்திற்கு தேவைப்படும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற்றது.
இம்முகாமில் ஓட்டுநர், அடிப்படை மருத்துவர் உதவியாளர், உள்ளிட்ட பணிகளுக்கான நேர்காணலில் 133 நபர்கள் கலந்துகொண்டனர். இதில் ஓட்டுநர் பணிகளுக்கு 30 நபர்களும், அடிப்படை மருத்துவர் உதவியாளர் பணிக்கு 15 நபர்களும், என மொத்தம் 45 பேர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மனிதவள துறை ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன், மண்டல ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497