18 years in prison for soldier who killed 9 while driving under the influence of alcohol; Perambalur court verdict.

கடந்த 2018ம் ஆண்டு, மே.11 தேதியன்று, காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த மோகன் (வயது 36) என்பவர் தனது மனைவி லெட்சுமி (32), மகள்கள் பவித்ரா(14), நிவேதா(8), மகன் வரதராஜன் (5), மற்றும் உறவினர்கள் முரளி (55), மேகலா(19), நாரயணன்(40), பூபதி (23), ஆகிய 9 பேரும் ஒரு ஷவர்லெட் டவேரா வாடகை காரில் காஞ்சிபுரத்திலிருந்து கொடைக்கானல் நோக்கி  நள்ளிரவு12.30 மணியளவில் பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு பகுதியில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர் திசையில் திருச்சியிலிருந்து கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நோக்கி சென்ற ஹீண்டாய் வெர்னா கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பறந்து சென்று எதிரே சென்ற ஷவர்லெட் டவேரா காரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஷவர் லெட் டவேரா காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 9 பேர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே டவேரா காரை பின் தொடர்ந்து புதுச்சேரியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற எட்டியோஸ் காரும் டவேரா காரின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிச் சென்ற பெரம்பலூரில் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நடத்தி வரும் முன்னாள் இராணுவ வீரரான சக்திசரவணன் (51) உட்பட 5 பேரும் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்தனர். பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பல்கீஸ், குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தி 9 பேரை பலியாக்கிய முன்னாள் ராணுவீரர் சக்திசரவணனுக்கு, 18 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 47,500 அபராதமும் விதித்தும் தீர்பளித்தார். பின்னர், சக்திசரவணனை (வயது 55) போலீசார் சிறையில் அடைந்தனர்.

அப்போது விபத்து நடந்த செய்தியை பார்க்க… 

https://www.kalaimalar.com/perambalur/two-cars-clash-near-perambalur-9-people-including-2-children-killed-4-people-were-injured/

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!