பெரம்பலூர் : இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
பெரம்பலூர் மாவட்டம் இந்த ஆண்டு 93.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் மாணவர்கள் 4664 பேர்களும் பெண்கள் 4547 பேர்களும் என மொத்தம் 9211 பேர்கள் எழுதினர். அதில் மாணவர்கள் 4323 (92.69 %) மாணவிகள் 4294 ( 94.44 %) என மொத்தம் 93.55 % தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கணிதம் 93 பேரும், இயற்பியல் 1, வேதியயிலில் 14 பேரும், உயிரியல் 5 பேரும், கம்பியூட்டர் சயின்ஸ் 1, பொருளியல் 1, வணிகவியல் 6, வரலாறு 2, வணிக கணக்கியல் 1, (507) தியரி 2, (601) தியரி 1, (625) தியரி 10 என மொத்தம் 137 பேர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
100 சதவீதம் தேர்ச்சி அடைந்த பள்ளிகள் விவரம்
அரசு பள்ளிகள் 2, அரசு உதவி பெறும் பள்ளி 1, சுயநதிப்பள்ளி 6, மெட்ரிக் பள்ளிகள் 8 பள்ளிகள் என மொத்தம் 17 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி , கூத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி,
பெரம்பலூர் மவுலான மேல்நிலைப்பள்ளி மாணவிகள் , துறைமங்கலம் அன்னை ஈவா மேரி கோக் பள்ளி,
பாடாலூர் அன்னை மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் பனிமலர் மேல்நிலைப்பள்ளி, சாரதாதேவி பெண்கள் மேல்நிலைப்பபள்ளி,
நெற்குணம் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி, உடும்பியம் ஈடன் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
நக்கசேலம் ஹயகிரிவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லப்பைக்குடிக்காடு விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர் சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
பெரம்பலூர் ஸ்ரீ ராமக்கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செயிண்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர் சுவாமி விவேகானந்த பள்ளி -களை சேர்ந்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.