2nd World Conference of Tamil Conference in Namakkal on behalf of KMDK; Bhoomi Pooja
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல்லில் 2ம் உலக கொங்கு தமிழர் மாநாட்டிற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
நாமக்கல்லில் வரும் பிப்ரவரி 3ம் தேதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் 2ம் உலக கொங்கு தமிழர் மாநாடு நடைபெறுகிறது. அழிந்துவரும் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாத்தை பாதுகாக்கவேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு ஏற்றுமதிக்கான வாய்ப்பை அரசு உருவாக்கிடவேண்டும்.
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த 2ம் உலக கொங்கு மாநாடு நடைபெறுகிறது.
இதனைமுன்னிட்டு நாமக்கல் பொம்மை குட்டை மேடு லட்சுமி திருமண மண்டபம் அருகில் மாநாட்டு திடல் அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பேரவை தலைவர் தேவராஜன்,மாநில தலைவர் சென்னியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநாட்டுக்குழு தலைவர் நதிராஜவேல், துணைத்தலைவர் சந்திரசேகர், பொருளாளர் மணி, மாநில பொருளாளர் பாலு, செயற்குழு உறுப்பினர்கள் சின்ராஜ், துரை, துணைப்பொதுச்செயலாளர்கள் தங்கவேல், நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டு குழு செயலாளர் மாதேஸ்வரன் வரவேற்றார். பூமி பூஜையை சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் துவக்கிவைத்தார்.
இதில் மண்டல இளைஞர் அணி செயலாளர் செந்தில்,மாநில விவசாய அணி தலைவர் கோபால்சாமி, மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ்பொண்ணுவேல், மாநில வர்த்தகர் அணி செயலாளர் சண்முகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.