19,176,400 Metric Ton of paddy has been procured from 5,947 farmers in Perambalur district: Collector Information!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கை.களத்தூரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை கலெக்டர் வெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டார்.

நெல் கொள்முதல் செய்ய, இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்த தேதியின் அடிப்படையில் சரியான தேதியில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும், அதற்குண்டான தொகையினை தாமதமாக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் எனவும், கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவினை சரியான முறையில் அளக்க வேண்டும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை எடைக்கேற்ப சரியான முறையில் வழங்கப்படுகிறதா என அதற்கான அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பொருட்டு 18 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. கொள்முதல் விலையாக நெல் சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,060-ம், நெல் பொது ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,015- வழங்கப்படுகிறது,

பெரம்பலூர் வட்டத்தில் குரும்பலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் 314 விவசாயிகளிடமிருந்து 913.200 மெ.டன் நெல்லும், வேப்பந்தட்டை வட்டத்தில் அரும்பாவூர் நெல் கொள்முதல் நிலையத்தில் 450 விவசாயிகளிடமிருந்து 1563.760 மெ.டன் நெல்லும், அரும்பாவூர்2 நெல் கொள்முதல் நிலையத்தில் 424 விவசாயிகளிடமிருந்து 1518.880 மெ.டன் நெல்லும், பூலாம்பாடி1 நெல் கொள்முதல் நிலையத்தில் 340 விவசாயிகளிடமிருந்து 1219.920 மெ.டன் நெல்லும், பூலாம்பாடி 2 நெல் கொள்முதல் நிலையத்தில் 137 விவசாயிகளிடமிருந்து 587.200 மெ.டன் நெல்லும், தொண்டமாந்துறை நெல் கொள்முதல் நிலையத்தில் 359 விவசாயிகளிடமிருந்து 1387.640 மெ.டன் நெல்லும், அன்னமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்தில் 387 விவசாயிகளிடமிருந்து 1166.480 மெ.டன் நெல்லும், வெங்கலம் நெல் கொள்முதல் நிலையத்தில் 152 விவசாயிகளிடமிருந்து 488.160 மெ.டன் நெல்லும், பாண்டகப்பாடி நெல் கொள்முதல் நிலையத்தில் 417 விவசாயிகளிடமிருந்து 1306.520 மெ.டன் நெல்லும், வி.களத்தூர் நெல் கொள்முதல் நிலையத்தில் 301 விவசாயிகளிடமிருந்து 863.640 மெ.டன் நெல்லும், கை.களத்தூர் நெல் கொள்முதல் நிலையத்தில் 359 விவசாயிகளிடமிருந்து 1172.680 மெ.டன் நெல்லும், குன்னம் வட்டத்தில் துங்கபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் 111 விவசாயிகளிடமிருந்து 349.560 மெ.டன் நெல்லும், காடூர் நெல் கொள்முதல் நிலையத்தில் 182 விவசாயிகளிடமிருந்து 699.440 மெ.டன் நெல்லும், அகரம்சீகூர் நெல் கொள்முதல் நிலையத்தில் 587 விவசாயிகளிடமிருந்து 1997.000 மெ.டன் நெல்லும், ஒகளுர் நெல் கொள்முதல் நிலையத்தில் 271 விவசாயிகளிடமிருந்து 789.720 மெ.டன் நெல்லும், நன்னை நெல் கொள்முதல் நிலையத்தில் 487 விவசாயிகளிடமிருந்து 1385.520 மெ.டன் நெல்லும், எழுமூர் நெல் கொள்முதல் நிலையத்தில் 268 விவசாயிகளிடமிருந்து 694.160 மெ.டன் நெல்லும், கீழப்புலியூர் நெல் கொள்முதல் நிலையத்தில் 401 விவசாயிகளிடமிருந்து 1072.920 மெ.டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கே.எம்.எஸ். 2021-22ஆம் பருவத்தில் ஆரம்பிக்கப்பட்ட 18 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து ஆகமொத்தம் 19,176.400 மெ.டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 5,947 விவசாயிகள் தங்களது நெல்லினை அரசுக்கு விற்பனை செய்து பயனடைந்துள்ளனர். 13.05.2022 வரை கொள்முதல் செய்யப்பட்டமைக்குண்டான தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

வேப்பந்தட்டை வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!