6000 toilets in the building 48 hours: Try to get an award for selfish
பெரம்பலூர் மாவட்டத்தில் 48 மணி நேரத்தில் 6000 கழிப்பறைகள் கட்டும் பணி : விருது பெற சுயநல முயற்சி நடைபெற்று வருகிறது.
தூய்மை பாரத இயக்கதின் மூலம் அனைத்து ஊராட்சிப்பகுதிகளிலும் தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இத்திட்டம் குறித்து பொதுமக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அனைவருக்கும் இத்திட்டம் சென்று சேரும் வகையிலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் சுமார் 6,000 கழிப்பறைகளை 48 மணி நேரத்தில் கட்டி முடிக்கும் வகையிலான பணிகள் இன்று காலை தொடங்கப்பட்டது.
இதற்கு முன்பு நிசாம்பாபாத்தில் 48 மணி நேரத்தில் 1000 கழிப்பறைகள் கட்டப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முறையாக அதிக அளவிலான எண்ணிக்கையில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்படுவது இதுவே முதன் முறையாகும்.
13.02.2017 காலை 7 மணிக்கு துவங்கிய இப்பணி 15.02.2017 காலை 7 மணிக்கு முடிவுறும் வகையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகின்றது. இப்பணிகள் செயல்படுத்துவதை கண்காணிக்கும் பொருட்டு ஊராட்சிக்கு தலா ஒரு தொடர்பு அலுவலர் வீதம் உதவி இயக்குநர் நிலையிலிருந்து ஊராட்சி செயலர் வரை அனைவரும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இப்பணியின் ஒட்டு மொத்த மதிப்பீடு ஆனது 7 கோடியே 20 லட்சமாகும். இப்பணிகளுக்கு 6, லட்சத்து 60 ஆயிரம் சிமெண்ட் கற்களும் 3 லட்சத்து 60 ஆயிரம் சிமெண்ட் உறைகளும் 3,00,000 சிமெண்ட் மூட்டைகளும் இதர பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றது.
இதர (மணல். கதவுகள் கழிப்பறை கோப்பைகள்) பொருட்கள் அனைத்தும் கழிப்பறை கட்டும் இடங்களில் தயார்செய்து வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு சுமார் 2,000 கொத்தனார்கள் மற்றும் 2,000 சித்தாள்கள் ஈடுபட உள்ளனர். இப்பணிகளில் உரிய தொழில்நுட்பத்தை பின்பற்ற 2,000 கொத்தனார்களுக்கும் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் 12.02.2017 அன்று 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், தூய்மை பாரத இயக்கம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் உதவியுடன் 100 சூழல் மேம்பாட்டு சுதாதாரக் கழிப்பறைகள் கட்டும் பணிகளும் இதில் நடைபெற்று வருகின்றது.
இக்கழிப்பறைகளை கட்ட தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ரூ.12,000ம், இந்தியன் ஆயில் கார்பரேசன் மூலம் ரு.18,000ம் வழங்கப்பட்டு, பாடாலூர், எசனை, எளம்பலூர் மற்றும் ஓலைப்பாடி ஆகிய ஊராட்சிகளில் தலா 25 வீதம 100 சூழல் மேம்பாட்டு சுதாதாரக் கழிப்பறைகள் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றது. மார்ச் மாதத்திற்குள் பெரம்பலூர் மாவட்டத்தில் திறந்தவெளிக் கழிப்பிடங்களே இல்லை என்ற நிலை எய்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சாக்கடைகள் தேங்கியும், கழிவுநீர் வாய்க்கால்களால் மாசடைந்தும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் பேருந்து, குடி நீர் உள்ளளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுக்கு அல்லாடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் உள்பட அதிகாரிகள் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே உள்ளது. இந்நிலையில் விருது பெற வேண்டும் என வீம்புக்காக செய்யப்படும் வேலைகளில் இதுவும் ஒன்று….