A peaceful protest with a black flag was held by the public protesting the construction of a panchayat office in a school near Perambalur! Work stopped!!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்டது புஜங்கராயநல்லூர் ஊராட்சி. அருகே ஜமீன் பேரையூரும் உள்ளது. அந்த ஊரில் அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி விளையாட்டு மைதானத்தில், அந்த ஊராட்சிக்கு அலுவலகம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதை அறிந்த பொதுமக்கள் திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஒன்று திரண்டு, பள்ளிக்கூடத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டக் கூடாது, வேறு எங்காவது கட்ட வேண்டும், ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி கூட மைதானத்தை மாணவர்கள் ஓடி பிடித்து, விளையாடவும், ஒதுக்கபட்ட இடத்தில் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரித்தனர். ஆனால், அதிகாரிகள் கேட்காமல் மீண்டும் இன்று காலை பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சப் – இன்ஸ்பெக்டர் ஜெய்குமார் தலைமையில், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பணிகள் நிறுத்தப்பட்டது, பொதுமக்கள் ஒன்று பொது இடத்தில், அமைதியாக கருப்பு கொடியுடன் அமைதி போராட்டம் நடத்தினர். பின்னர், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். போலீசார் பொதுமக்களுக்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இடம் பற்றாக்குறை உள்ள பள்ளிக்கூட வளாகத்தில்,கட்ட இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற பொதுமக்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்களிள் கோரிக்கையை அரசு அதிகாரிகள் மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.