A review meeting on corona prevention work was held in Perambalur, under the leadership of Sivashankar.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில், கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூரில் கலெக்டர் வெங்கடபிரியா, முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வின்போது ஆக்ஸிஜன் நிலையம், கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் பிரிவு, விரிவாக்கம் செய்யப்பட்ட பிரிவு, ஐ.எல்.ஐ மையம், சோதனை மையம், சவக்கிடங்கு வசதி, ரெம்டெஸ்விர் மருந்து இருப்பு, பொதுப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நபர்கள், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உணவு முறை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை, உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியன குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களை மீட்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது பெரிய இக்கட்டான நிலையில் இருந்து தற்போது அதனை கடந்து வந்துள்ளோம். அதேபோல் ரெம்டெஸ்விர் மருந்தின் தட்டுப்பாட்டினை சீர் செய்திடும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள். கொரோனா காலத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் அரசுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். கொரோனா காலத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் தன்னலமற்ற நோக்கிலும் சேவை மனப்பான்மையுடனும் பணிபுரிந்து வருகிறார்கள்.

தொற்று கண்டுள்ள நபர்களில் சில நபா;களுக்கு தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள இடவசதி இல்லாதவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்திடும் பொருட்டு, பெரம்பலூh; மாவட்டத்தில் 30 அரசு மருத்துவமனைகளில் 819 படுக்கை வசதியுடன் கூடிய இடைக்கால கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பெரம்பலூh; மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு பிளான்ட் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் நோய்க் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தியும், கொரோனா நல மையங்களை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை முறையாக கண்காணிப்பதனை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். மாவட்டத்தில் அதிகஅளவில் மருத்துவ முகாம்கள் நடத்தி, அதன் மூலம் தடுப்பு மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும்.

இதுதவிர, பெரம்பலூர் மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கானது சிறப்பான முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்காரணமாக நோய்த் தொற்றின் தாக்கமும் வெகுவாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தகுந்த மருந்துகள், மாத்திரைகள், ஆக்ஸிஜன்கள் உரிய நேரத்தில் கிடைத்திடவும், கொரோனா தொற்றுநோய் பரிசோதனை மேற்கொண்டவர்களின் முடிவுகள் வரும்வரை, அவர்கள் வீட்டு தனிமைபடுத்துதலில் வைத்திட சுகாதார அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

சளி மாதிரி பரிசோதனை முடிவுகளை விரைவில் வெளியிட அதிக அளவில் சுகாதார பணியாளா;களை இப்பணியில் ஈடுபடுத்திடவும், பரிசோதனை முடிவுகள் கால தாமதமின்றி கிடைத்திடவும், நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சைகள் வழங்கிட வேண்டும். குறிப்பாக சுகாதாரத் துறையினர் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கிராமப்புற பொதுமக்களுக்கு சளி மாதிரி பரிசோதனை அதிகம் மேற்கொள்ள வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக அரசின் காப்பீடு திட்டத்தின் வாயிலாக சிகிச்சை பெற 7 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாகவும் தனியார் மருத்துவமனைகளை இத்திட்டத்தின் கீழ் இணைத்திடவும், திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளின் விவரங்கள், சிகிச்சை பெற தேவையான அனைத்து ஆவணங்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பொது இடங்கள் மற்றும் அந்தந்த மருத்துவமனைகளில் விழிப்புணர்வு பதாகைகள் அமைத்தும், தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது 18 வயது முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 20.05.2021 அன்று திருப்பூரில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக முதல் கட்டமாக இதுவரை மொத்தம் 7,440 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இத்தடுப்பூசியானது 18 வயது முதல் 44 வயதுடைய கட்டட தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனை கடை வியாபாரிகள், மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள், அனைத்து அரசு ஊழியர்கள், அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அனைத்து ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கான முகாம்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்முகாமினை 18 வயது முதல் 44 வயதிற்குட்பட்டவா;கள் அனைவரும் பயன்படுத்தி தங்களை கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பாக சுகாதாரத் துறையின் சார்பில் தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். முதல் அலையின் தாக்கத்தை விட இரண்டாவது அலையின் தாக்கம் கூடுதலாக உள்ளது. எனவே அறிகுறி தென்படும் காலத்திலேயே எவ்வித பயமுமின்றி முன்னேற்பாடாக தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் கொரோனாவின் பாதிப்பினை முன்கூட்டியே தடுத்திட முடியும். இக்கட்டான பேரிடர் காலத்தில் தமிழக அரசுடன் பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர், கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளை பாதுகாத்திடவும், படுக்கை வசதியுடன் கூடிய தனி அறை வழங்கி சிகிச்சை வழங்கிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

ஆய்வுக்கூட்டத்தின்போது, பெரம்பலூர் எம்.எல்.ஏ எம். பிரபாகரன், போலீஸ் எஸ்.பி நிஷா பார்த்திபன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சி.ராஜேந்திரன், டி.ஆர்.ஓ ராஜேந்திரன், மருத்துவக் கல்லூரி சிறப்பு அலுவலர் மரு. கல்யாணசுந்தரம், இணை இயக்குநர் (மருத்துவ நல பணிகள்) கோ. திருமால், வேளாண் துறை இணை இயக்குநர் ச. கருணாநிதி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் த. செல்வகுமரன், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத் துறை) ஏ.எச். சுரேஷ் கிருஸ்டோபர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எம். கீதாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!