A truck carrying unlicensed limestone was seized near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பகுதியில் லாரிகளில் அனுமதியின்றி சோலிங்கற்கள் ஏற்றி செல்லப்படுவதாக புவியியல் மற்றும் சுரங்க துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தன்பேரில், விஜயகோபாலபுரத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் தமிமுல் அன்சாரி தலைமையில் ஆய்வு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை மடக்கி நிறுத்திய அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில், அப்போது அந்த லாரியில் பெரம்பலூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து இரூர் பகுதியில் உள்ள கிரஷருக்கு அனுமதியின்றி சோலிங்கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சோலிங் கற்களுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் சோலிங்கற்களை கடத்தி வந்ததாக பெரம்பலூர் மாவட்டம் தண்ணீர் பந்தல் இந்திரா நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் விஜயன் (38).டிப்பர் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்ததுடன், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.