A woman has filed a complaint against the DMK Town Panchayat secretary and her family for claiming to sell land near Perambalur and getting Rs. 11 lakhs.
பெரம்பலூர் அருகே நிலத்தை விற்பதாக ரூ.11 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக திமுக பேரூர் செயலாளர், குடும்பத்தினர் மீது பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் வெறும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்த முருகேசன் மனைவி கஸ்தூரி என்பவர் போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதில், பூலாம்பாடி பேரூராட்சி துணைத் தலைவராகவும், திமுக பேரூர் செயலாளராகவும் செல்வலட்சுமி உள்ளார். அவரது கணவர் சேகர், அவரது மகன் சந்தோஷ்குமார், மாமியார் நல்லம்மாள் ஆகியோர் கஸ்தூரியிடம் ரூ.11 லட்சம் பெற்றுக் கொண்டு அவருக்கு விற்பதாக கூறிய நிலத்தை கிரையம் எழுதி தருவதாக கூறி மோசடி செய்து விட்டதாகவும், அவரிடம் இருந்து தனக்கு நிலத்தையோ அல்லது அவரிடம் கொடுத்த பணத்தையோ தனக்கு பெற்று தர வேண்டுமென கஸ்தூரி அந்த புகாரில் தெரிவித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் மாவட்ட போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த 2 ஆண்டுகளாக செல்வ லட்சுமி சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை அலைக்கழித்து வந்திருப்பதும், மேலும் பணத்தை திரும்ப வழங்காமல் இருப்பது உறுதியானதால் முதல் கட்டமாக செல்வலட்சுமியின் மகன் சந்தோஷ்குமாரை இன்று அதிகாலை அழைத்து வந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் இரு தரப்பினர் இடையேயும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பூலாம்பாடி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.