AIADMK chief Jayalalithaa’s to get better! : In Perambalur women wing ate rice soil :
பெரம்பலூர் மதனகோபால சாமி திருக்கோவிலில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அதிமுக மகளிர் அணியினர் மண் சோறு சாப்பிட்டனர்.
பெரம்பலூர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி மதனகோபால் கோவிலில் இன்று சிறப்பு யாகம், பூஜை, அபிசேகங்கள் நடத்தினர். பின்னர் கோவிலினுள் உள்ள தரையில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.
அதில் மகளிர் அணி கி.ராஜேஸ்வரி தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ ராமச்சந்திரன், அன்னமங்கலம் ஆர்தர் ஹெல்லர், யூனியன் சேர்மன்கள் பெரம்பலூர் ஜெயக்குமார், வேப்பந்தட்டை ஜெயலட்சுமி கனகராஜ், ஆலத்தூர் வெண்ணிலாராஜா, கீழக்கரை பன்னீர்செல்வம், ள்ளிட்ட ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கோவிலை சுற்றி பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.