AIADMK’s triple function tomorrow in Trichy: Call for volunteers to attend in large numbers; District Secretary RT Ramachandran Notice!
பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அதிமுகவின் 51ம் ஆண்டு தொடக்க விழா, மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாள் விழாக்கள் என முப்பெரும் விழா, மாநாடு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை ஏப்.24 மாலை திருச்சி பொன்மலையில் உள்ள ஜி கார்னரில் நடக்கிறது. முன்னாள் அமைச்சசர்கள் ஆர்.வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
அதனால், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க, மாநில, மாவட்ட, ஒன்றியம், நகரம், பேரூர், மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உரிய ஏற்பாடுகளை செய்து அழைத்து வந்து மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என அவர், விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விளம்பரம்: