Almighty Vidyalaya Public School students interact with electrochemistry scientists!

சிவகங்கை மாவட்டம் , காரைக்குடியில் உள்ள புகழ்பெற்ற மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு , பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி பப்ளிக் பள்ளி மாணவர்கள் 6 ஆசிரியர்கள் தலைமையில் சுமார் 83 பேர் கல்விச் சுற்றுலா சென்றனர். அங்கு CECRI எனப்படும் மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த வினாடி-வினா போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சுமார் 1500க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆல்மைட்டி பள்ளி மாணவர்கள் முதல், மற்றும் மூன்றாம், நான்காம் பரிசுகளை வென்றனர்.

10ஆம் வகுப்பு பயிலும் ஜீவன் பிரகாஷ் முதல் பரிசும், 12ஆம் வகுப்பு படிக்கும் ஹரிராஜ் மூன்றாம் பரிசும் , 10ஆம் வகுப்பு பயிலும் பாலாஜி நான்காம் பரிசையும் பெற்றனர். மாணவர்கள் பல்வேறு வேதியியல் ஆய்வகங்களைப் பார்வையிட்டனர். நேரடியாக நடைபெற்ற பரிசோதனைகளை கவனித்து, தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டு, அவற்றை விஞ்ஞானிகளிடம் தெளிவுபடுத்திக் கொண்டனர். ஜீவன் பிரகாஷ் (10ஆம் வகுப்பு) கூறுகையில், “நாங்கள் புத்தகங்களில் மட்டுமே படித்த பேட்டரிகள் தொடர்பான நேரடி பரிசோதனைகளைப் பார்ப்பது மிகவும் அற்புதமாக இருந்தது. 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்ற போட்டியில் முதல் பரிசு பெற்றது, எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்ற எனது ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது” என்றும்,

ஹரிராஜ் (12ஆம் வகுப்பு) கூறுகையில், “விஞ்ஞானிகள் சிக்கலான கருத்துகளை மிகவும் எளிமையான முறையில் விளக்கினர். இந்தப் பயணம் நமது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியது” என்றும், நிகிதா ஸ்ரீ (12ஆம் வகுப்பு) கூறுகையில், “அறிவியல் எவ்வாறு நமது அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுகிறது என்பதை தெளிவுபடுத்தினார்கள்” என்றும் கூறினார். விஞ்ஞானிகளுடன் கலந்தலோசித்து வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளி தாளாளர் முனைவர் ஆ.ராம்குமார், மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டினர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!