Perambalur: Milk producers protest against the cooperative society by pouring milk onto the ground!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டப்பாடி கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பணியாளர்கள் நியமனத்தில் குளறுபடி இருப்பதாக தெரிவித்த பால் உற்பத்தியாளர்கள் இன்று காலை பெரம்பலூர் குளிர்வூட்டும் நிலையம் முன்பு உள்ள நுழைவு வாயிலில் பால் நிறைந்த கேன்களுடன் வந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், பாலை தரையில் கொட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர். அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தொண்டப்பாடி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் 2 கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருவதாகவும், மேலும், தொணடப்பாடி வெளியில் இயங்கும் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 600 லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு அங்கு விற்று வரும் நிலையில் சங்கத்தின் கொள்முதல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களில் குளறுபடி உள்ள சீர் செய்ய வலியுறுத்தி இன்று பெரம்பலூர் வந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதாக சுமார் 30 க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் வந்திருப்பதாக தெரிவித்தனர். மேலும், தரையில் பாலை ஊற்றி போராட முயன்றவர்களை அங்கிருந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பாலை கொள்முதல் செய்து அனுப்பி வைத்ததுடன் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறியதன் பேரில் கலைந்து சென்றனர். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.









