Perambalur: Mysterious death of a young man at a stone quarry; police launch intensive probe into whether it was murder.

பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் மகன் வெற்றிவேல் (27), இன்று காலை சுமார் 9:00 மணி அளவில் வயல் காட்டிற்கு செல்வதாக வெற்றிவேல் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். மதியம் சுமார் இரண்டு மணி அளவில் கவுல்பாளையம் காளியம்மன் நகரை சேர்ந்த வடிவேல் மகன் சரவணன் (30) முருகேசன் என்பவரது குவாரிக்கு வந்த போது, வெற்றிவேல் தலையில் ரத்தம் வடிந்த நிலையில் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் உள்பட ஊர் பொதுமக்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் வெற்றிவேலின் உடலை உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிவு கொலையா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், நெடுவாசல், கவுள்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!