Perambalur: Two youths arrested for selling ganja to children!

பெரம்பலூர் மாவட்டம், அடைக்கம்பட்டி அருகே உள்ள கண்ணப்பாடி வனப்பகுதியில் நேற்றிரவு 2 வாலிபர்கள் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய காத்திருந்தனர். அப்போது ரோந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீஸார், 2 பேரையும் மடக்கி பிடித்து செய்த சோதனையில் அவர்களிடம் 50 கிராம் கஞ்சா இருந்தததை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் டி.களத்தூர் தென்றல் நகரை சேர்ந்த கண்ணபிரான் மகன் ஸ்டாலின் (23), கலையரசன் மகன் சூர்யா (23) என்பதும் தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த போலீஸார், 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பெரம்பலூர் சிறையில் அடைத்தனர். சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் சம்பவங்கள் அடுத்த தலைமுறையினர் போதைக்கு அடிமையாக்கி சீராழிக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!