Perambalur: ‘Mahalir Vidiyal Payanam’ scheme in government buses completely renamed; transformed into ‘Vetri Payanam’!

கடந்த ஆட்சியில் திமுக அரசு பெண்கள் முன்னேற்றத்திற்காக மகிளர் விடியல் பயணம் என்ற திட்டத்தில் நகர பேருந்துகளில் பெண்கள் பல்வேறு அலுவல்களுக்கு சென்று வர கட்டணமில்லா செல்ல தேர்தல் வாக்குறுதியின் படி வழங்கியது. பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால் ஓட்டை உடைசல் பஸ் என எவரும் சொல்லி விடக் கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக புதிய நவீன பஸ்கள் இயக்கப்பட்டன.

தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அத்திட்டத்தில் முதலில் மகளிர் விடியல் பயணத்தில் விடியலை நீக்கி மகளிர் பயணம் என வழித்தட பெயர் பலகையில் மாற்றம் செய்தது. அது நேற்று வரை இருந்த நிலையில் அதுவும் முற்றிலும் 100 சதவீதம் நீக்கப்பட்டு இன்று முதல் அனைத்து கட்டணமில்லா பஸ்களிலும் வெற்றிப் பயணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பொதுமக்களிடையே தற்போது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. டவுன் பஸ்களிலாவது திமுக வினர் கொண்டு வந்த திட்டத்தின் பெயரை விட்டு வைத்திருக்கலாமே! அந்த திட்டத்தை நீட்டிப்பு செய்த புறநகர் பஸ்களில் மட்டும் தவெக கொண்டு வந்த திட்டத்தின் பெயரை வைத்திருக்கலாமே என பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தவெக அரசுக்கு தெரிவிக்கின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!