Ammonite Museum in Perambalur!

ஆப்பிரிக்காவில் உள்ள எகிப்து பிரமிட் கட்டப்பட்ட பகுதியில் கடந்த சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நைல் நதிக்கரையாக இருந்துள்ளது. ஆனால் தற்போது அது 6 கி.மீக்கு அப்பால், நைல் நதி பாய்ந்தோடுகிறது. அது போலவே, பெரம்பலூர் மாவட்டம் ஒரு வித்தியசமான புவியியல் அமைப்பை கொண்டுள்ளது. அதோடு, கால பரிணாமத்தில் பல்வகையான ஆயிரக்கணக்கான உயிரனங்கள் வாழ்ந்து மறைந்ததற்கான அதன் தொல்லுயிர் எச்சங்கள், மற்ற நாடுகளில் நீண்ட தேடுதலுக்கு பின் கிடைக்க கூடிய பாசில்கள் என்படும் கல்மரம் போன்ற படியுருக்கள் எளிதாக அறிவியல் மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் எளிதாக கிடைத்த வண்ணம் உள்ளன. அதோ போல், அரியலூர் மாவட்டத்திலும், டைனோசர் முட்டை படியுருக்களும் கிடைத்துள்ளது.

தொல்லுயிர் எச்சங்கள் மண்ணோடு மண்ணாக மக்காமலும், நொந்து சிதைந்து போகமலும், புவி மற்றும் வளி மண்டல அழுத்தங்களால் கடின கல் போன்ற தொல்லுயிர் எச்சங்களாக காண கிடைக்கின்றன. இது அறிவியல் துறைக்கு பெரிதும் உதவியாக உள்ளது. சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பெரம்பலூர் மாவட்டத்தின், காரை, கொளக்காநத்தம், பேரளி, சித்தளி பகுதிகள் ஒரு காலத்தில் கடலாக இருந்துள்ளது.


இந்திய தீபகற்பமானது, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் இருந்து பிரிந்து நகர்ந்து வந்தது என புவியியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கண்டத்திண்டு நகர்வுகளாயே தற்போது உள்ள இமயமலை உருவானதாக கூறப்படுகிறது.

ஐக்கிய அமீரக தொல்லியல் ஆராய்ச்சசி கல்வியாளர் நிர்மல்ராஜா, பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா முன்னிலையில், காரை உள்ளிட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட போது கிடைத்த சுறாமீனின் பல் மற்றும் சில பாசி இனத்தை சேர்ந்த படிமங்களையும், அவர் வெளிநாடுகளில் ஆய்வு மேற்கொண்ட போது, கிடைத்த அமோனைட்-களையும் நன்கொடையாக வழங்கினார்.

பின்னர், அவர் தெரிவித்தாவது:

பெரம்பலூர் மாவட்டம், கிரிட்டியஸ் காலம் என்றழைக்கப்படும், டைனோசர்களின் இறுதிக்காலம். சுமார் 6.5 கோடி மற்றும் 12 கோடி ஆண்டுகளுக்கு மத்தியில் பல்வேறு மாற்றங்களை பெற்றுள்ளது. அதில் கடலும் காலப்போக்கில் நகர்ந்துள்ளது. மடாஸ்கர் தீவில் இருந்து இந்தியா பிரிந்த காலகட்டத்தில், வாழ்ந்த உயிரினங்கள் எச்சமும், மடகாஸ்கர் தீவில் கிடைத்த அமொனைட் எச்சங்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் கிடைக்கும் அமோனைட்களும் ஒரே மாதிரியாக சுமார் 48 – 55 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தாகவும் உள்ளது.

தொல்லுயிர் ஆராய்ச்சியில் முக்கியமானது, அமோனைட் எச்சங்களாகும். அமோனைட்களுக்கு மட்மே தனி அருங்காட்சியம் இல்லை. அதே போல் அதே கால கட்டத்தில் உலகில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த தொல்லுயிர் எச்சஙகளையும் ஒன்றாக வைக்கும் போது, அது எப்படி வாழ்ந்தது, அழிந்தது எப்படி புரியம். அதற்காக தனக்கு கிடைத்த தொல்லுயிர் எச்சங்களை கலெக்டர் வெங்கடபிரியாவிடம் வழங்கினேள் என்றார்.

தலைக்காலிகள் வகையை சேர்ந்த கணவாய், ஆக்டோபஸ் போன்றவை தற்போது எஞ்சியுள்ள உயிரினங்கள். இவை நன்னீரில் வாழ முடியாது, கடல் நீரில் மட்டுமே வாழும். இது போன்ற உயிரினங்களை அழியாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முடியும். பல வகை உயிரினங்கள் வாழ்ந்து முற்றிலும் இல்லாமல் அழிந்து விட்டன என தெரிவித்தார்.

பின்னர், கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்தாவது:

வரலாற்று தொன்மைமிக்க, கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த தொல்லுயிர் படிமங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காரை, கொளக்காநத்தம், தெரணி, கரம்பியம், குன்னம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் எளிதாக கிடைத்து வருகின்றன. கல்மரத்தை போன்று மக்கள் பார்க்க சிரமமப்படக் கூடாது என்ற நோக்கில், பெரம்பலூரிலேயே அமோனைட்களுக்கு தனி அருங்காட்சியம் சுமார் 1.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள், ஆராய்ச்சி மாணவர்கள் எளிதில் பார்க்கும் வகையில் இருக்கும். இது உலகியே தனி அருங்காட்சியம் முதன்முறையாக பெரம்பலூரில் அமைவதால் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும் என தெரிவித்தார்.

மதுரை மல்லி, திருநெல்வெலி அல்வா, தேனி திராட்சை, திண்டுக்கல் பிரியாணி, சேலம் மாம்பழம், தஞ்சை பெரியகோயில் போன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு எந்த தனி சிறப்பு இருக்காதா என ஏங்கிய மக்களுக்கு தற்போது கல்மரத்திற்கு அடுத்த படியாக உலகிலேயே முதல் அமொனைட் அருங்காட்சியம் அமைவது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆராய்ச்சி அதிகமானால், தற்போது உள்ள, அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி தஞ்சை, திருவாரூர், நாகை, வட்டகளின் கோடிக்கண்கான ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் கால பரிமாணங்கள் தெரிய வரும்.
அமோனைட்டுகளை ஆன்லைனிலும் வாங்கலாம்….லிங்கை க்ளிக் செய்து பாருங்கள்

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!