An unidentified youth hanged himself in Perambalur!

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் சாலையில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் சாலையில் உள்ள தனியார் பைக் ஷோரூம் எதிரில் உள்ள புங்க மரத்தில் இன்று காலை சுமார் 7: 30 மணியளவில், அடையாளம் தெரியாத வாலிபர் மோட்டாருக்கு பயன்படுத்தும் ரப்பரை தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவ்வழியாக சென்றவர்களும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும், அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ப்ளூ கலர் லோயர், சந்தன கலர் முழுக்கை சட்டை அணிந்திருந்தார். வலது முழங்கை அருகில் ஜோதி என பச்சை குத்தியும் உள்ளார், வலது தோள்பட்டையில் ஏற்கனவே ஆபரேஷன் செய்த தழும்பும் உள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து போன வாலிபர் எந்த ஊர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தீவிர விசாரணை நடத்தியதில், இறந்த வாலிபர் பெரம்பலூர் அருகே உள்ள சித்தளியை சேர்ந்த தங்கப்பிள்ளை – ஜோதி இவர்களின் மகன் மணிகண்டன் என்பது தெரியவந்தது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!