Announced the dates for local elections: nomination from tomorrow
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் அக்டோபர் 24 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்கள் வாங்கி முடித்துவிட்டனர் .இந்நிலையில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் வெளியிட்டார்.
தேர்தலுக்கு நாளை (செப்டம்பர் 26) முதல் மனுதாக்கல் செய்யலாம். அக்டோபர் 3 ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அக்டோபர் 4 ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனு வாபஸ் பெற அக்டோபர் 6 ம் தேதி கடைசி நாளாகும். அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 21 ம் தேதி நடைபெறும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா அக்.,26 ம் தேதி நடக்கிறது. மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி,பேருராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் தலைவர் மற்றும் துணை தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகியோருக்கான மறைமுக தேர்தலுக்கான கூட்ட நாள் நவம்பர் 2 ம் தேதி நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.