Anti-Terrorism Day Pledge  at Perambalur Collector’s Office!

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை, கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழியை கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் அரசு பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர். அப்போது,

அகிம்சை, சகிப்புத் தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்து போராடவும், நாம் உறுதி கூறுகிறோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!