At Perambalur bus stand, a young girl was chased away and tried to be raped by a young beggar under the influence of ganja!
பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் இன்று காலை சுமார் 9.30 மணி அளவில், வேறு ஊருக்கு செல்வதற்காக திருமணமான இளம் பெண் ஒருவர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து வேறு பஸ்சில் பயணம் செய்ய முற்பட்டார். அப்போது அவரது அழகில் மயங்கிய பஸ் ஸ்டாண்டில் பிச்சை எடுக்கும் மாற்றுத் திறனாளியான கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை சேர்ந்த நெடுஞ்செழியன் (37) என்ற இளைஞன் அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட அப்பெண் கட்டி பிடிப்பதற்குள் தப்பித்து பேருந்தில் ஏறி இறங்கி அடுத்த பேருந்தில் சென்று தஞ்சமடைய முயற்சித்தார். அதற்க்குள் யாசகர் நெடுஞ்செழியன் கஞ்சா போதையில் அந்தப் பெண்ணை கட்டிப்பிடிக்க முயன்றார். அடுத்தடுத்த பேருந்திலும் தப்பிக்க விடாமல் கையில் இருந்த ஊன்று கோல் உதவியுடன் அந்தப் பெண்ணை விரட்டினார். அந்த பெண் கூக்குரலிட்டார்.
இதை பார்த்த கடைக்காரர்கள் அங்கிருந்த சக பயணிகள் இளம் பெண்ணை கஞ்சா போதையில் இருந்த இளைஞரிடம் இருந்து மீட்டனர். அந்த பிச்சைக்காரன் பெண்ணை காப்பற்ற முன் வந்தவர்களை கையில் இருந்த ஊன்று கோலாலால் சரமாரியாக தாக்க முயன்றான். பொதுமக்கள் கஞ்சா போதையில் இருந்த இளைஞனுக்கு தர்ம அடி கொடுத்து பெண்டு நிமித்தி எடுத்தனர். அதற்குள் புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் விரைந்து வந்து அந்த இளம் பெண்ணை பத்திரமாக அவரது ஊருக்கு அனுப்பி வைத்தனர். கஞ்சா போதையில் இருந்த யாசகர் மாற்றுத்திறனாளி ஆன நெடுஞ்செழியனை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெடுஞ்செழியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கஞ்சா போதையில் பணத்தை கையில் வைத்துக் கொண்டு பேருந்துக்காக காத்திருக்கும் பெண்களிடம் வாங்கடி படுக்க என பலமுறை பேண்டை அவிழ்த்தும் காட்டியும் உள்ளார். மேலும, பிச்சை எடுக்கும் நெடுஞ்செழியனுக்கு நாள்தோறும் சுமார் தினசரி 2000 ரூபாய் பொதுமக்கள் இறக்கப்பட்டு வழங்குவதால், அதை வைத்துக்கொண்டு போதையில் வரும் போகும் பெண்களிடம் வம்பு செய்வதோடு, இது நல்லா இருக்கு, அது நல்லா இருக்கு என அவ்வப்போது கஞ்சா போதையில் திட்டிக் கொண்டும் பேருந்து நிலையத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதும் பெண்களை அச்சுறுத்துவதுமாக காது கிளியும் அளவிற்கு அருகில் சென்று கத்துவது உள்ளிட்ட சேட்டைகளை வாடிக்கையாக செய்து வருவதாக பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமூக நல பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார், நகராட்சி நிர்வாகம் இணைந்து இது போன்ற கொடூர மனம் படைத்த யாசகர்களை பேருந்து நிலையத்திலிருந்து அப்புறப்படுத்துவதோடு, பெண் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நெடுந்தூர பயணிகளிடம் பணம் கொள்ளை அடிப்பதும் பொருட்களை திருடி செல்வதும், தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தனியாக வந்த இளம் பெண்ணை பட்டப் பகலில் பிச்சைக்காரர் கற்பழிக்க முயன்ற சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, போலீசார் பெரம்பலூர் பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.