Attempted rape of a 14-year-old girl near Perambalur; Atrocities on the rise in northern states Workers in Tamil Nadu!

தமிழகத்திற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு பெண்ணை பலத்காரம் செய்து தீயிட்டு எரித்து தப்பித்து செல்ல முயன்றனர்.

சென்னை அருகே தமிழக பெண்கள் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்பெட்டி இருக்கையில் அமர்ந்து கொண்டு இடம் கொடுக்காமல் தகராறு செய்தனர்.

இதே போன்று, திருப்பூர் உள்ளிட்ட பல ஊர்களிலும் வன்முறை நிகழ்த்தி உள்ளனர். கேரளாவிலும் இதே போன்று தகராறு செய்தனர். ஊர் மக்கள் ஒன்று கூடி விரட்டி அடித்தனர். பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் குடிபோதையில்,அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் கண்டக்டரை தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது.

இந்த நிலையில்..,ஜார்கண்ட் மாநிலம், கும்லா அருகே உள்ள தாகு பாணியை சேர்ந்த சுகதேவ் ராம் (20), பிலிங் ப்ரா பகுதியை சேர்ந்த ராம் லால் கான் சிங் மகன் காமேஸ்வர் சிங் (19), கும்லா-வை சேர்ந்த லட்சுமன் நாக சியா தபானி மகன் பெகு நாக சியா (20) மூவரும் பெரம்பலூர் அருகே உள்ள அருமடல் பிரிவு ரோட்டில் உள்ள சுமன் ப்ளை ஆஷ் ப்ரிக் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள அருமடல் பிரிவு சாலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பள்ளி விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து வந்த 14 வயது சிறுமி, உறவினரின் 3 வயது மகனை பார்த்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் மூவரும், நேற்று மாலை அந்த சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததோடு, பலத்கார முயற்சியிலும் ஈடுபட்டனர். இது குறித்து சிறுமி அவரது உறவினர்களிடம் தெரிவித்த நிலையில் அங்கிருந்தவர்கள் ஒன்று கூடி கட்டிவைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மேலும், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைக்கிறார்கள் என முதலாளிகள் பணிக்கு வடமாநில தொழிலாளர்களை அமர்த்துவதால், இது போன்ற எல்லையற்ற தொல்லைகளை தமிழக மக்கள் நாளுக்கு நாள் அதிகமாக அனுபவித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் , வடமாநில தொழிலாளர்களை உரிய வரன்முறை செய்து குற்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVT – விளம்பரம்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!