Aug,29. Carrom tournaments going on at the stadium in Perambalur districts
கேரம் விளையாட்டுப்போட்டிகள் 29.08.2016 அன்று காலை 8.30 மணியளவில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. இளநிலைப்பிரிவில் மழலை வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், முதுநிலைபிரிவில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும் நடைபெற உள்ளது.
இளநிலைப்பிரிவில் மாவட்ட அளவிலான ஒற்றையர் போட்டியில் முதலிடம் பெறுபவா;களுக்கு ரூ.1000-மும் 2-ம் இடம் பெறுபவா;களுக்கு ரூ.5000ம், 3-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.250- ம்,
மாவட்ட அளவிலான இரட்டையர் போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.2000ம், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.1000மும், 3-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.500- ம் வழங்கப்படும்.
முதுநிலைபிரிவில் மாவட்ட அளவிலான ஒற்றையர் போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.2000மும், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.1000மும், 3-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.500 ம்,
மாவட்ட அளவிலான இரட்டையர் போட்டியில் முதலிடம் பெறுபவா;களுக்கு ரூ.4000-மும், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2000மும், 3-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.1000-மும் என பரிசுத்தொகை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள், அக்டோபர்-2016 ம் மாதம் மாநில அளவில் நடைபெற உள்ள மாவட்டங்களுக்கிடையேயான கேரம் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ,மாணவியர்கள் பிறந்த தேதிக்கான கல்விச்சான்றிதழை தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்று வந்து பயன்பெற வேண்டும், என மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.