Avoid playing on cell phone to protect your eyes: Eye Doctors Instruction!
நாமக்கல் : கண்களைப் பாதுகாக்க செல் போனில்விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு கண் டாக்டர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் கொல்லிமலை வாழவந்தி நாடு மாதிரிப் பள்ளியில் மாணவர்களுக்கு கண் பாதுகாப்பு மற்றும் கண் நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் ரவி தலைமை வகித்தார். இதில் நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க மாவட்ட திட்ட மேலாளர், கண் டாக்டர் ரங்கநாதன் பங்கேற்று பேசியதாவது:
மனிதனின் முக்கிய உறுப்பான கண் நலமுடன் இருக்க வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகளான கேரட், பப்பாளி, இனிப்பு பூசணிக்காய், பச்சை கீரை காய்கறிகள், மீன், பால், முட்டை அதிகமாக சாப்பிட வேண்டும். கண்ணில் சூடு குறைய விளக்கெண்ணெய் ஊற்றும் பழக்கம் மலை வாழ் மக்களிடையே காணப்படுகிறது. அது மிகவும் ஆபத்தானது,
கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றுவதால் பூஞ்சை கிருமி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும் கண்ணில் தூசி விழுந்தால் அதனை வாயில் ஊதி எடுப்பது, நாக்கு வைத்து எடுப்பது போன்ற பழக்கங்கள் மிக தவறானது.
கண் பார்வை குறைபாடு உள்ள மாணவர்கள் கண்ணாடி அணிய அவர்களுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.படிக்கும்போது கண் மங்கலாக இருப்பதாக கண் டாக்டரிடம் மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
பரிசோதனையில் அவர்களின் கண் நீர் குறைவாக இருக்கிறது. செல்போனில்அதிகம் விளையாடுவதுதான் இதற்கு காரணம்.
மாணவர்கள் செல் போனில் விளையாடுவதைத் தவிர்த்தால் கண் நலமாக இருக்கும் என பேசினார். இதில் அனைவருக்கும் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தினி, கண் மருத்துவ உதவியாளர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.