Ayurvedic medical camp near Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள அயன்பேரையூர் கிராமத்தில், எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், பெரம்பலூர் சபாபதி ஆயுர்வேத மருத்துமனையும் இணைந்து சிறப்பு ஆயுர்வேத மருத்துவ முகாம் அவ்வூரில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடத்தியது.
இம்முகாமில், இடுப்பு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, பக்கவாதம், முகவாதம், கால்ஆனி, கால்வெடிப்பு, வயிற்றுப் புண், மஞ்சள் காமாலை, இரத்த சோகை, சிறுநீரக் கல், இரத்த அழுத்தம், தோல் நோய்கள், ஆஸ்துமா, நீரழிவு, உடல் பருமன், சளி, இருமல், தைராய்டு கோளாறுகள், தலைமுடி உதிர்தல், குழந்தையின்மை, மாதவிடாய், கோளாறு, வெள்ளைப் படுதல் போன்ற நோய்கள் பரிசோதிக்கப்ட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில், 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சே.வ. செல்வம், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரெ.ராமசாமி மற்றும் பெரம்பலூர் சபாபதி ஆயுர்வேத மருத்துமனை மருத்துவர் ஆர்.சிவக்குமார், மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.