Before the man appeared, the Karai in the ocean was studied on behalf of the village to make a tourist Spot!

பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்களில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததும், தொன்மைமிக்கதுமான சாத்தனூர் தேசிய கல்மரப் பூங்கா மற்றும் காரை பகுதி விளங்கி வருகின்றது.

காரை பகுதியிலுள்ள தொல்லியியல் சிறப்பு வாய்ந்த இடம் சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது மனிதன் தோன்றுவதற்கு முந்தைய கால கட்டத்தில் கடல் சூழ்ந்த இடமாக கருதப்படுகிறது.

இக்கால கட்டத்தில் கடலில் வாழ்ந்ததாக கருதப்படும் கடல் நத்தை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் உடல் பாகங்கள் தற்போது இப்பகுதியில் கிடைக்கப்பட்டு வருகின்றது.

காரை பகுதியில் கிடைக்கப்படும் பொருட்களை, நமது வருங்கால சந்ததிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, இங்கு கிடைக்கப்பெறும் உயிரினங்களின் படிமங்கள், பொருட்களை சேகரித்து அவற்றை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும், இப்பகுதியை புவியியல் சார்ந்து படிக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் பணிகளை மேற்கொள்வதுடன், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தினார்.

மேலும், அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் முட்டை வடிவிலான கற்கள், கல்நத்தை வடிவிலான கற்கள், 45 செ.மீ விட்டமுடைய கல் நத்ததைகள் மற்றும் கடல் ஆமைகள் உள்ளிட்ட தொன்மையான பொருட்களை பார்வையிட்டு, அவற்றை அருங்காட்சியகத்தில் வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று முதன்மை செயலர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அரசாங்க பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!