BJP leader Annamalai should give up advertisement politics and engage in constructive politics; KMDK founder and MLA. E.R. Easwaran!
பெரம்பலூரில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை இணைந்து மாவட்ட கொங்கு குடும்ப விழா, பெரம்பலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை பிளஸ் மேக்ஸ் நிறுவனரும், பன்னாட்டு தொழிலதிபருமான டத்தோ. எஸ் பிரகதீஷ்குமார் தலைமையில் நடந்தது. ரந்தினி பிரகதீஷ்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் ஆர்.இளையப்பன் வரவேற்றார்.
விழா எழுச்சியுரையாற்றி, பரிசுகள் வழங்க கலந்து கொண்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நிறுவனரும், திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.ஆர். ஈஸ்வரன் கலந்து கொண்டார். பின்னர். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்ட மக்களின் நலனுக்காக சேலம் மாவட்டம் தலைவாசலில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் வகையில் 4 வழிச்சாலை அமைக்க வேண்டும், விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள வறட்சி மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளது போல பெரம்பலூர் மாவட்டத்திற்கும் ஸ்கீம் வாட்டர் திட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும், அரசு நிதி வழங்க தேவையில்லை அனுமதி கொடுத்தால் போதும் விவசாயிகள் ஒன்றிணைந்து அந்த திட்டத்தினை செயல்படுத்தி கொள்வார்கள் என்றார். கள் இறக்குவதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும், இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். சட்டமன்றத்திலும் பேசி இருக்கிறோம். விவசாயிகளை வாழ வைக்கவும் அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கும் கள் இறக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்றார்.
திமுக கூட்டணியில், தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம் என்றும் எங்களுக்கு கொங்குநாடு முன்னேற்றத்திற்கான நிதியை வழங்க வேண்டும், மக்களுடைய வளர்ச்சிக்காக திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தவிர ஆட்சியில் பங்கு என்பது போன்ற வேறு எந்தவிதமான கோரிக்கைகளும் கிடையாது என்றார்.
அண்ணாமலை ஆக்கப்பூர்வமான அரசியலை செய்ய வேண்டும், விளம்பர அரசியல், விமர்சன அரசியல் செய்வதால் கட்சியை வளர்க்க முடியாது. இதனால் பாஜக தமிழகத்தில் வளராது. அண்ணாமலையால் ஏதாவது நல்ல திட்டங்களை மத்திய அரசிடம் பேசி கொண்டுவர முடியுமா எனக் கேள்வி எழுப்பிய அவர் நாங்கள் அவிநாசி அத்திக்கடவு திட்டம், அவிநாசி மேம்பாலம் நீட்டிப்பு திட்டம் கொண்டு வந்திருக்கிறோம் திருமலை முத்தாறுத் திட்டத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறோம் .இது போன்று மற்றவர்களை விமர்சனம் செய்வதை தவிர்த்து நாங்கள் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்து கொண்டிருக்கிறோம்.
அண்ணாமலையும் த.வி.க., தலைவர் விஜயும் நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று இருமாப்போடு பேசுகிறோம் என்று கூறுகிறார்கள். தமிழகத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்துவிடும் என்று கூறுவது எவ்வளவு பெரிய இருமாப்பு. ஆனால் நாங்கள் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் நாங்கள் அவ்வாறு சொல்கிறோம் ஆனால் விஜய் கட்சி தொடங்கிய உடனே முதலமைச்சர் நாற்காலியில் அமர்வேன் என்று சொல்வது இருமாப்பு கிடையாதா என்றவர், திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டிருக்கிறோம் அதனால் நாங்கள் இரு மாப்புடன் தெரிவிக்கிறோம் என்றார்.
மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்திற்கு சென்று உதவி செய்வது போட்டோ சூட் என்று கூறுகிறார்கள் ஆனால் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களை வீட்டிற்கு அழைத்து அதனை போட்டோ ஷூட் எடுத்து மீடியாக்களுக்கு கொடுப்பது சரியா என்ற கேள்வி எழுப்பினார. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் கொலை, கொள்ளைகள் தடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்து ம் கிடையாது. அதற்காக அரசு தொடர்ந்து செயல்பட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு தீவிரம் காட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மக்களவை உறுப்பினர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அக்கட்சியின் மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கடந்த ஏப்ரல் மாதம் வெட்டிய கரும்பிற்கான நிலுவைத் தொகை வழங்க வேண்டும், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மக்கள் அவசர சிகிச்சை பெறும் வகையில் மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும், நாமக்கல், திருச்செங்கோடு பகுதிளை போல ஸ்கீம் வாட்டர் விவசாயத்திற்கு கொண்டு வரவேண்டும், வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்க மானியத்தில் சோலர் மின்வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை தீர்மானங்காளாக நிறைவேற்றினர்.
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநில தலைவர் ஆர்.தேவராஜன், மாநில துணை பொது செயலாளர் முன்னாள் எம்.பி. ஏ.கே.பி சின்ராஜ், மாநில இளைஞரணி செயலாளர் எஸ். சூரியமூர்த்தி, நாமக்கல் எம்.பி., வி.எஸ் மாதேஸ்வரன், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மாநில இளைஞரணி துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் , சென்னை மாவட்ட செயலாளர் வி.ஆர். இசை பாலு, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கே ஆர் வேல்முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் என். மண் மணி, மண்டல இளைஞர் அணி செயலாளர் எம் விஜயகுமார், பெரம்பலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பேட்டரி மணி டாக்டர் அர்ஜுனன், டாக்டர் வசந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் , ஆல்மைட்டி பள்ளி வித்யாலயா செயலாளர் மோகனசுந்தரம், மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஈடன் கார்டன் நிறுவனர் ஆர் முருகேசன், மலையாளப்பட்டி, பில்லங்குளம், ஈச்சங்காடு, ஈச்சம்பட்டி அரசலூர், ஆலம்பாடி, இரட்டைமலை சந்து, வடகரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளாக அச்சமூகத்தினர் கலந்து கொண்டனர். மாவட்ட அமைப்பாளர் வேலப்பன் நன்றி கூறினார்.