Breaking the lock of a house near Perambalur and robbing jewelery money; Police investigation!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை நடு தெருவில், வசித்து வருபவருபவர் ஜெயராமன் (50). இருசக்கர வாகனத்தில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். மூத்த மகன் மகேந்திரன் என்பவர் உள்ளூரிலேயே தனியாக வசித்து வரும் நிலையில், ஸ்ரீரங்கத்தில் வசித்து வரும் இளைய மகன் ஆனந்த கண்ணன் என்பவரை பார்ப்பதற்காக ஜெயராமனும், அவரது மனைவியும் வீட்டைப் பூட்டி விட்டு சென்றனர்.
மர்ம நபர்கள் நேற்றிரவு வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் எடுத்துச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்திவு செய்த அரும்பாவூர் போலீசார், கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.