Candidate Parivendar, IJK leader Ravi Pachamuthu with small screen actors intensive vote collection for lotus symbol!

பெரம்பலூர் எம்.பி தொகுதியில் பாஜக வேட்பாளர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்குகள் கேட்டு முசிறி அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை செய்த ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்துக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து கோயில் நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து மாங்கரை பேட்டை தனியார் டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் பணிபுரியும் பெண்களிடம் இளைய வேந்தர் ரவி பச்சமுத்து துண்டு பிரசுரங்கள் வழங்கி தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அதனைத் தொடர்ந்து கள்ளர் தெரு, பரிசல் துறை ரோடு, கடைவீதி, மேலதெரு, பழைய பேருந்து நிலையம், தா.பேட்டை சாலை, புதிய பேருந்து நிலையம், துறையூர் ரோடு, அந்தரப்பட்டி, அழகாப்பட்டி, உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாமரை சின்னத்தில் வாக்களித்து பாரிவேந்தரை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும் என சின்னத்திரை நடிகர்கள் பாரிவேந்தரை ஆதரித்து அபியும் நானும் புகழ் குறிஞ்சிநாதன், ஆனந்த ராகம் ராஜ்கமல் , அம்மு ராமச்சந்திரன் ஆகியோர் தாமரை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சாரத்தின் போது பேசிய ரவி பச்சமுத்து: பாரிவேந்தர் மீண்டும் எம்.பி.,யானால் தா .பேட்டை வழியாக நாமக்கல் – பெரம்பலூர்-அரியலூர் வரை ரயில்வே பாதை, காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை, மகளிர் அரசு கல்லூரி, 1500 குடும்பங்களுக்கு உயர்தர இலவச மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை உங்களுக்கு செய்ய உள்ளார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதி மக்களுக்கும் பணியாற்ற வேண்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் போட்டியிடுகிறார். எனவே படித்த பண்பாளர் ஆன பாரிவேந்தரை நீங்கள் மீண்டும் எம்.பியாக தேர்வு செய்ய வேண்டும் என பிரச்சாரத்தின் போது பேசினார். அப்போது பாஜக, ஓபிஎஸ் அணியினர், அமமுக, ஐஜேகே உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

இதே போல, லால்குடி மற்றும் பெரம்பலூர் நகரிலும், அரணாரை கிராமத்திலும் சின்னத்திரை நடிகர்களுடன் பிரச்சாரம் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ ஆர்டி.ராமச்சந்திரன் உள்பட கூட்டணி கட்சியினர் திராளக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!