Car-bike collision near Perambalur; One victim!
பெரம்பலூர் அருகே கார் – பைக் மோதிக்கொண்ட விபத்தில், ஒருவர் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள ரஞ்சன்குடியை சேர்ந்தவர் மருதமுத்து மகன் அங்கமுத்து (50). இவர் இன்று காலை மொபட்டில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். தேவையூர் அருகே U டர்ன் எடுத்தார். அப்போது, புதுக்கோட்டையில் இருந்து ஆரணிக்கு சென்ற கார் அங்கமுத்து மீது மோதியதில், காயமடைந்து ரத்தவெள்ளத்தில் மிதந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அங்கமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, தகவல் அறிந்த மங்களமேடு போலீசார். காரை ஓட்டி வந்த ஆரணி பகுதியை சேர்ந்த பழனி மகன் அருண் (27) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உடல் கூறாய்விற்காக
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை போலீசார் விரைவாக சரிசெய்து சீராக்கினர்.