Car crash near Perambalur; 3 killed including 2 women!
திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். இன்று காலை சுமார் 4.45 மணி அளவில் கார், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபலபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது காரை கமலக்கண்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி, 3 முறை உருண்டு, விபத்திற்குள்ளானது.
இதில் கமலக்கண்ணன் (48), திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். அவரது மனைவி லதா (40), விளையாட்டு பயிற்சியாளராக உள்ளார். திருவாரூரை சேர்ந்த சவுந்தரராஜன் மனைவி வேம்பு (65) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவை சாரதா மில் ரோடு மலர் தம்பி மனைவி மணிமேகலை (64), திருவாரூர் மாவட்டம் எடமேலையூரை சேர்ந்த சவுந்தரராஜன் மகன் ராமச்சந்திரன் (44) இருவரும் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்த இடத்தில் ஏ.டி.எஸ்.பி பாண்டியன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
உரிய தூக்கம் எடுத்துக் கொள்ளாமல் கமலக்கண்ணன் வண்டியை ஓட்டியதால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.