Case registered against the police who put up a banner congratulating the cinema film!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் எம்.எல்.ஏவுமான உதயநிதி நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் இன்று வெளியானது. அதற்கு திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்த்துகள் தெரிவித்து பேனர் வைத்து உள்ளனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டியை சேர்ந்தவர் கதிரவன் (41), இவர் பாடாலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டும், அங்கு பணிக்கு செல்லாமல், விடுமுறை எடுத்துக் கொண்டு, பெரம்பலூரில் தங்கி இருந்துள்ளார். திமுக அபிமானியான இவர் நேற்றிரவு பெரம்பலூர் நகர் பாலக்கரை பகுதியில், சொந்த செலவில் பதாகை வைத்தார்.

இதை அறிந்த பெரம்பலூர் போலீசார் அதை உடனடியாக அகற்றினர். மேலும், போலீசாரின் கண்ணியத்திற்கும், துறையின் மாண்பை குறைக்கும் வகையில் அவர் மீது, செயல்பட்டதால், வழக்குப்பதிவு செய்து துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடுநிலையாக செயல்படும் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தாண்டா போலீஸ் என பெரம்பலூர் மாவட்டத்தில் பலர் இருக்கும் நிலையில், இப்படியும் போலீசா என நினைக்க தோன்றியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!