Cashless transaction training to the district-level government employees

பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ள மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுட்டுள்ளது. இக்குழுவில் வளர்ச்சித் துறை, மகளிர் திட்டம் மற்றும் புதுவாழ்வு திட்ட அலுவலர்கள் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இக்குழுவினருக்கான இரண்டு நாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடந்தது.

இப்பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்ட்டதாவது:

இனிவரும் காலங்களில் பணமில்லா பரிவர்த்தனை என்பது மக்களின் இன்றியமையாத ஒன்றாக விளங்கப்போகிறது. நாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் பணத்தை எடுத்துச் செல்லும் நிலை பணமில்லா பரிவர்த்தனையால் முற்றிலும் மாற்றமடையஉள்ளது.

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றோம் எனவே, செல்போன் மூலமாகவே நமது பணமில்லா பரிவர்த்தனைகளை சாத்தியப்படுத்தும் வகையில் அப்ளிகேஷன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இ-பேங்கிங், மொபைல் பேங்கிக் சேவைகளை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பணமில்லா பரிவர்த்தனையை அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இன்று அரசு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அனைத்து அலுவலர்களுக்கும், பாரத பிரதமரின் கனவான பணமில்லா பரிவர;த்தனை என்ற இலக்கை அடைவதற்காக, பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், அதனால் பொதுமக்களுக்கும், நாட்டுக்கும் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கி கூறிட வேண்டும்.

மேலும், இதன் ஒரு பகுதியாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள், ஓய்வூதியம் பெறும் முதியோர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பணமில்லா பரிவர்த்தனை குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

இதன்மூலமாக வங்கிக்கு சென்று வங்கி சேவைகளை மேற்கொள்வதற்கு பதிலாக இருக்கும் இடத்திலிருந்தே பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கான வழிமுறைகளை பொதுமக்களிடம் இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ள அலுவலர்கள் எடுத்துக்கூற பயிற்சி அளிக்கப்ட்டது. அரசு துறைவாரியான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!