Chief Minister M.K. with two district party officials about the 2026 election victory. Stalin discussed!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பெரம்பலூரில், பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பெரம்பலூர் பூமணம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, உயர்கல்வி துறை அமைச்சர் கோ.வி.செழியன், தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.இராசா, கே.என்.அருண்நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பிரபாகரன்,கா.சொ.க.கண்ண், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் 70 பேர் மட்டுமே கலந்து கொண்ட கூட்டமாகும். இந்த கூட்டத்தின் நோக்கம் முழுக்க, முழுக்க கட்சி வளர்ச்சிக்காவும், 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து, இரண்டு மாவட்ட நிர்வாகிகளும் தனித்தனியாக உரையாடியதுடன், தலைவர் மு.க.ஸ்டாலினின் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர். திருச்சி வழியாக விமானத்தில் சென்னை சென்றடைந்தார்.