Chief Minister M. Stalin’s visit to Perambalur; District DMK Executive Committee Meeting! District in-charge V. Jagatheesan’s report!

பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நவ.5 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணியளவில், பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் (தனது) தலைமையில், கே.என்.அருண்நேரு.எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி – போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அது சமயம், மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள்,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்றும்,

திமுக தலைவருமான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரம்பலூர் வருகை குறித்தும், தொகுதி பார்வையாளர்கள் அறிமுகம், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல். உள்ளிட்ட கட்சி ஆக்கப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பார் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!