Chief Minister’s 2 Girl Child Protection Scheme: You can apply to receive maturity benefit: Perambalur Collector information!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது நிறைவடைந்த பயனாளிகளுக்கு முதிர்வு தொகை பெற்று வழங்கும் பொருட்டு, முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து 18 வயது பூர்த்தி அடைந்த பயனாளிகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தங்களது வைப்புத் தொகை பத்திரம், பெண் குழந்தையின் பத்தாம் வகுப்பு சான்றிதழ், மற்றும் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் தாய் மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகிய சான்றுகளை வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வழங்கி விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.