Chief Minister’s Cup 2024 Competition; Perambalur Collector congratulates the state-level medal winners!

முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளில் மாநில அளவில் பதக்கம் வென்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பொன்னாடை அணிவித்துப் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 10.09.2024 அன்று தொடங்கி 23.09.2024 அன்று வரை 5 வகையான பிரிவுகளில் 27 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது இப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.

மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை 2024ஆம் ஆண்டுக்கான போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, கல்லூரி பிரிவுகளில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த மாணவ,மாணவிகளான வைஷ்ணவி தடகள போட்டியில் முதலிடமும், சிரஞ்சீவி ஜிம்னாஸ்டிக் போட்டியில் முதலிடமும், சஞ்சய் குத்துச்சண்டை போட்டியில் மூன்றாமிடமும்,

பள்ளி பிரிவில் பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவி சாத்விக்கா 400 மீட்டர் தடகள போட்டியில் மூன்றாமிடமும், பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.1,00,000 பரிசுத் தொகை, தங்க பதக்கம் மற்றும் சான்றிதழும், மூன்றாமிடம் பெற்றவருக்கு ரூ.50,000 பரிசுத்தொகை, வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இவ்விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தாங்கள் வெற்றி பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றுகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவிடம் வாழ்த்து பெற்றனர். அவர்களை வாழ்த்திய கலெக்டர், அரசின் சார்பில் விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை உங்களைப் போன்ற வீரர் வீராங்கனைகள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநில அளவில் பதக்கங்களை பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தது போல, இந்திய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு நமது மாநிலத்திற்கும் நமது நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். விளையாட்டு துறையில் நீங்கள் சாதிக்க உங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என தெரிவித்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி உடனிருந்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!