Coconut saplings for Rs. 60 : Perambalur Collector Notification!
பெரம்பலூர் மாவட்ட தோட்டக் கலைத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வெங்கலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில், திட்டங்களுக்கு தேவையான காய்கறி பயிர் நாற்றுகள், பழமரக்கன்றுகள், தென்னங்கன்றுகள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது பண்ணையில் நல்ல தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்க ஏதுவாக தயார் நிலையில் உள்ளது. தென்னங்கன்று ஒன்றின் விலை ரூ.60- மட்டும் ஆகும்.
விவசாயிகளுக்கு தேவைப்படின் தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள், வெங்கலம் அரசு தோட்டக்கலைப் பண்ணை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம், என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.