Computerized Power Resistance Complaint Center at Perambalur 24 hours a day.

பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அம்பிகா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர் ந்த மின் நுகர்வோர்கள் மின் தடைகளை உடனடி யாக நிவர்த்தி செய்ய கட்டணமில்லாத தொலைபேசி எண் 1912 மற்றும் 1800599 2912 ஆகியஎண்களை தொடர்பு கொண்டு தங்கள் மின் தடை புகார்களைப் பதிவு செய்தால், தங்களின் இடம் தேடி வந்து மின்வாரிய ஊ ழியர்கள் உடனடியாக தங்க ளது மின்தடையை சரி செ ய்வார்கள். மேலும் பெரம்ப லூர் மின்தடை புகார் மைய ம், உதவி மின் பொறியாள ரை செல்போன் எண் 9498 392129 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் தொலைபேசி எண் 04328- 224055 மற்றும் 7094966709 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு, புகார் தெரிவித் து உடனடியாக மின் தடை நீக்கும் பயனை அடையலா ம்.

மின்கம்பங்கள் சாய்ந்து மின் கம்பங்கள் பழுதடை ந்த நிலையில் இருந்தா லோ, மின்கம்பிகள் தொய் வாக இருந்தாலோ 9486111 912 என்ற எண்ணில் வாட் ஸ் அப் மூலமாகவும் புகார்க ளைத் தெரிவிக்கலாம். மே லும் மின் விபத்துகளைத் தவிர்க்கும்பொருட்டு பொ துமக்கள் வீடு, கட்டிடங்கள் கட்டும் போது மின் பாதை யிலிருந்து போதிய இடை வெளியை விட்டு கட்ட வே ண்டும். பொதுமக்கள் மின் பாதைக்கு அருகிலோ அல் லது மின் பாதைக்கு கீழோ மரங்களை வளரவிடவேண்டாம். இதனால் உண்டாகும் உயிரிழப்புகளை தவிர்க்க, ஒத்துழைப்பு தரவேண்டும் என பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!