Perambalur: S.I. Jayaraman Killed in Accident; Police Pay Final Tributes with 21-Gun Salute!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கல்லையை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 58). பெரம்பலூர் 4 ரோடு அருகில் வசித்து வந்த இவர் பாடலூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்றிரவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தனது ஸ்கூட்டியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 4 ரோடு தனியார் கார் ஷோரூம் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வேலுசாமி மகன் சதீஷ்குமார் (வயது 29) தனது உயர்ரக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரது பின்னால் அதே பகுதியைச் சேர்ந்த இளையபெருமாள் (29) அமர்ந்து வந்தார். சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஓட்டி வந்த ஸ்கூட்டியும், சதீஷ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேராக மோதியது. இதில், சம்பவ இடத்தில் பாடாலூர் சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உயிரிழந்தார்.

பின்னர், சிகிச்சைக்காக சென்ற சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். விபத்தில் இறந்து போன இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பம் குறித்து பெரம்பலூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னால் அமர்ந்து வந்த இளையபெருமாள் முகம் மற்றும் கைகளில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டு உயிர் தப்பினார்.

மறைந்த அதிகாரி எஸ்.எஸ்.ஐ. ஜெயராமன் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்த போலீஸ் எஸ்.பி பிரபாகர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழுங்க சிறப்பு உதவி ஆய்வாளர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!