Perambalur: Unidentified persons break house lock and steal 33.5 sovereigns of gold jewelry.

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பிலால் தெருவை சேர்ந்தவர் முகமது ஹனிபா மகன் ஷாஜகான் பாபு ( 66 ) இவர் என்எல்சி நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஷாஜகான் பாபு கடந்த 03.04.26 தேதி சென்னையில் உள்ள தன் மகள் வீட்டில் மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை 04:30 மணிக்கு வீட்டில் இருந்து 2 மர்ம நபர்கள் வெளிவந்து அருகில் இருந்த வாழை தோப்பு வழியாக சென்றதை பார்த்த பக்கத்து வீட்டு நபர் சர்ஜீன் அகமது என்பவர் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஷாஜகானுக்கு தகவல் அளித்துள்ளார். வீட்டில் வந்து பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 33.5 சவரன் தங்க நகைகளை கொள்யையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து புகாரின் வழக்குப் பதிவு செய்த மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!