Condemning the central government’s law amendment, lawyers continue to boycott court work in Perambalur!
மத்திய அரசு முப்பெரும் சட்டங்களில் திருத்தம் செய்ததை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை பெரம்பலூர் பார் அசோசியசன் மாவட்டத் தலைவர் இ. வள்ளுவன் நம்பி தலைமையில் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு செய்து சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது இதனை திரும்ப பெற வேண்டும். பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை நீதிமன்றங்களில் இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல, அட்வகேட் அசோசியசன் சங்கத்தினரும், இன்றும், நாளையும், நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வழக்காடிகளின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.