Continuous rain in Perambalur district! Recorded rainfall details!
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு முதலே தொடர் மழை அமைதியாக பெய்து வருகிறது. இன்று பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6.30 மணி வரை பெய்த மழையளவு விவரம் (மி.மீ):
பெரம்பலூர் 32, எறையூர் 5, கிருஷ்ணாபுரம் 3, வ.களத்தூர் 2, தழுதாழை 10, வேப்பந்தட்டை 18, அகரம்சீகூர் 5, லப்பைக்குடிக்காடு 5, புதுவேட்டக்குடி 17, பாடாலூர் 3, செட்டிக்குளம் 2 என மொத்தம் 102 மி.மீ அளவு மழை பதிவாகி உள்ளது. மாவட்த்தின் சராசரி மழையளவு 9.27 மி.மீட்டராகும்.