Cows fainted and died near Perambalur due to sudden f Request for compensation!
பெரம்பலூர் மாவட்டம், வடக்குமாதவி ஊராட்சிக்கு உட்பட்ட சோமண்டாபுதூர் கிராமம் உள்ளது. அந்த ஊரில், கடந்த சில தினங்களாக மாடுகள் , கழனி தொட்டியில் தண்ணீர் பருகிய பின்னரும், மாட்டு தீவனம் சாப்பிட்ட சில மணிநேரங்களில் மாடுகள் மயங்கி விழுந்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து இறந்த சம்பவம் அக்கிராம கால்நடை வளர்ப்பவர்களை சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதனால், மானாவாரி சாகுபடியுடன் உபரியாக ஆடு, மாடுகளை விவசாய கூலித் தொழிலாளர்களும், விவசாயிகளும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், மாடுகள் இறந்த சம்பவம் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
அந்த ஊரை சேர்ந்த வசந்தா என்பவருக்கு சொந்தமான 2 மாடுகளும், கவிதா சொந்தமாக 2 மாடுகளும், செட்டியம்மாளுக்கு சொந்தமான 3 மாடுகளும், பூங்கோதை சொந்தமான மாடு ஒன்றும், மலர்க்கொடி மாடு ஒன்றும் தொடர்ச்சி இறந்து விட்டன. இது குறித்து தகவல் அறிந்த கால்நடை பராமரிப்பு துறையினர் இறந்த மாடுகளை உடற்கூறு ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறியாமை காரணமாக மாடுகளுக்கு காப்பீடு செய்யாததால், இறந்த போன மாடுகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் கால்நடை வளர்ப்பவர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.