Deadline extended for Muslim students to apply for scholarships to pursue postgraduate studies abroad!

பெரம்பலூர்: தமிழ்நாடு அரசு 2026-2027 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 09.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ/மாணவியர்கள் 2026-2027 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய QS (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் (Unconditional offer letter) பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்துக்கும் மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப் படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல் & நிதி, மனிதநேயம் & கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரம் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனித நேய படிப்புகள் (Humanities), சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெறுபவராக இருத்தல் வேண்டும். மேலும், வெளிநாடு சென்ற பின் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும ஏற்கெனவே கல்லூரியில் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.bcmbcmw.tn.gov.in/ welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005, என்ற முகவரிக்கு 09.11.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ப.அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!