Perambalur: District Resource Trainer position; information from the Collector!

பெரம்பலூர் மாவட்ட வளப்பயிற்றுநராக பணிபுரிய 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமைப் பெற்றிருக்க வேண்டும். சுய உதவிக்குழுக்கள் பயற்சியாளர், அரசு சாரா நிறுவனத் துறை மற்றும் பிற அரசுத் துறைகள் ஆகியவற்றில் பணியாற்றிய 4 வருட அனுபவம் உள்ள மற்றும் கிராமப் புறங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் பல்வேறு முக்கிய பங்குதாரார்களுக்குப் பயிற்சி அளித்த அனுபவம், கணினித் திறன் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகளைக் கையாள்வதில் நடைமுறைப் பயன்பாட்டு அறிவு ஆகியவை பெற்றிருக்க வேண்டும். மதிப்பூதியம் மாவட்ட வளப்பயிற்றுநர் தகுதியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்டும் –A Grade Rs..2000/-, மும், B Grade Rs.1500/- மும் என -50 சதவீதம் மதிப்பூதியம் பயிற்சியாளருக்கான பயிற்சியில் கலந்து கொள்ளுதல். (TOT/Workshop/Meeting/Conducted by SMMU&NMMU) பணித்திறன் அடிப்படையில் தகுதி (Grade) ஒரு வருட காலத்திற்கு பிறகு மாற்றப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட தேர்வுக்குழு மூலமாக எழுத்து தேர்வு (50 மதிப்பெண்கள்) மற்றும் நேர்முகத் தேர்வு (50 மதிப்பெண்கள்) நடத்தப்பட்டு பெறப்படும் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே, தகுதிகளையுடைய விண்ணப்பதாரர்கள் ‘திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தரை தளம், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர்-621212 என்ற முகவரிக்கு 03.11.2026 மாலை 5.00 மணிக்குள் நேரில் அல்லது தபாலில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!