Perambalur: Street-corner play campaign on legal awareness!

பெரம்பலூர் மாவட்ம், அம்மாப்பாளையம் கிராமத்தில் ‘குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு (போக்சோ) சட்டம், போதைப்பொருள் மற்றும் இணைய குற்றங்கள் குறித்தான தெருமுனை நாடக பிரச்சார மூலம் சட்ட விழப்புணர்வு முகாம் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஏ. சரண்யா தொடங்கி வைத்தார். இதில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக சட்டக்கல்லூரி மாணவிகள் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மாணவிகள் தெருநாடகம் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான போக்சோ சட்டம் குறித்தும், போதையினால் ஏற்படும் தீங்கினை குறித்தும், இணையங்கள் மூலம் நடைபெறும் குற்றங்கள் குறித்தும் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவாக மாணவிகள் நாடகமாக எடுத்துரைத்தனர். சட்டக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் அக்னஸ், அமலா, அனிதா நாடகத்தின் செயல்பாட்டினையும், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும் மாணவிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டார். பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக சட்டக்கல்லூரியின் LOBUT நிகழ்ச்சியின் டீன் டாக்டர், அங்கயற்கண்ணி கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சட்ட தன்னார்வலர்கள் மார்கண்டன், கலியபெருமாள் உள்ளிட்ட சட்ட தன்னார்வலர்களும் செய்திருந்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497