Perambalur: Grama Sabha meeting on Nov 1; Collector’s announcement!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் 01.11.2026 அன்று உள்ளாட்சிகள் தின கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தமிழ்நாடு கிராம மேம்பாடு, மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு, குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் முறையை தடுத்தல், தமிழ்நாடு பல்லுயிர் மேலாண்மை குழு குறித்து விவாதித்தல், வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், சபாசார் வளைதளம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, நவ. 1 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் அப்துல் ராசிக் கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!