Perambalur: Educational institution leases a government pond and spruces it up!

பெரம்பலூரில், நடுவில் சிக்கிய அரசு குளத்தை லீசுக்கு எடுத்து அழகுபடுத்தியது ஒரு கல்வி நிறுவனம். பெரம்பலூரில் இயங்கி வரும் தனலட்சுமி சீனிவாசன் நிறுவனம் பல்வேறு தொழில்களை செய்த பிறகு கல்வி சேவை வணிகத்திற்குள் காலடி எடுத்து வைத்தது. கல்வி மட்டும் அல்லாமல் சிட்பண்ட்ஸ், எரிசக்தி, மது பாருடன் கூடிய ஹோட்டல், மருந்துவம் மற்றும் மருந்து மாத்திரைகளை தயாரிக்கும் துறைகளிலும் களம் கண்டு வருகிறது. பெரம்பலூரின் மேற்கு பகுதியிலும், ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சேரியிலும் கல்வி நிறுவனத்தை தொடங்கி மெல்ல மெல்ல விவசாயிகளிடம் இருந்து நிலங்களை விலைக்கு பெற்று விரிவுபடுத்தி உள்ளது. ஆனால், இந்நிறுவனத்தின் நடுவில் அரசுக்கு சொந்தமான குளம் ஒன்று சிக்கி கொண்டது. இதில் நீர்வழி பாதை, ஆயக்கட்டு பாதைகள் உள்ளதால், அடிக்கடி அந்நியர்கள், வருவாய் துறையினர் வந்து சென்றனர். இதனால், கல்வி நிறுவனத்திற்குள் இடையூறும், வருவாய் துறையினருக்கு வருவாயும் செலுத்தும் நிலையும், லட்டர் பேடு கட்சிகளுக்கு நன்கொடை வழங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டுகளாக முடிவு கட்ட நினைத்த அந்நிறுவனம் சட்ட ஆலோசர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆலோசனையுடன் குத்தைக்கு எடுத்தனர். பின்னர். அலங்காரம் செய்து, கல்வி நிறுவனத்திற்கு நீர்சேமிக்கும் ஆதராமாகவும், பொழுது போக்கும் வகையில் இன்று படகுகளை விட்டு சவாரி செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்து இன்று திறப்பு விழாவும் செய்தனர்.
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் கல்லா கட்டுவதில் மட்டும் குறியாக இருப்பதை விடுத்து எப்படி ஒரு பயனற்ற குட்டையை பணத்தால் பயனுள்ளதாக்கி கொள்ளமுடியும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். அதோடு ஒரு தனி மனிதன் பல ஆயிரம் 45 கி.மீ-க்குள் 3 மருத்துவக்கல்லூரிகளை நடத்தி வருவதையும், சுமார் 20 ஆண்டுகளாக அரசியல்வாதிகள் இன்னும் ஒரு மருத்துவக் கல்லூரியை கொண்டு இயலாத நிலையையும் அறிந்து மத்திய, மாநில அரசுகள் வெட்கப்பட வேண்டும்.














kaalaimalar2@gmail.com |
9003770497